லண்டன்: விராத் கோலியின் சாதனைகளை நெருங்கும் வாய்ப்பு, ஸ்டீவ் ஸ்மித்திற்கு கிடையாது என்றும், சச்சினை விட கோலியே சிறந்தவர் என்றும் கூறியுள்ளர் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன்.
அவர் கூறியுள்ளதாவது, “கோலி மற்றும் ஸ்மித் இருவருமே, தற்போதைய நிலையில், உலகின் முன்னணி பேட்ஸ்மென்கள். ஆனாலும், கோலியின் சாதனைகளையெல்லாம் நெருங்கும் வாய்ப்பு ஸ்மித்திற்கு கிடையாது.
நெருக்கடியான சூழல்களில் சிறப்பாக விளையாடுவது, வெற்றிகரமாக சேஸிங் செய்வது மற்றும் இந்தியாவிற்காக அதிகளவு வெற்றிகளைத் தேடித் தந்தது போன்றவையே இதற்கான காரணங்கள். அவர் சேஸிங் செய்கையில், நிறைய சதங்களைப் பதிவு செய்துள்ளார்.
அவர், நிறையப் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இந்த வகையில், அவர் சச்சினைவிட சிறந்தவர். ஏனெனில், தனிநபர் சாதனைகளைவிட, அணியின் வெற்றிதான் முக்கியம்” என்றுள்ளார் பீட்டர்சன்.