பாலியல் குற்றச்சாட்டுக்குப் பின் முதன்முதலாக பேட்டி கொடுத்த கெவின் ஸ்பேசி…..!

‘அமெரிக்கன் பியூட்டி’, ’செவன்’, ‘யூசுவல் சஸ்பெக்ட்ஸ்’, ‘பேபி டிரைவர்’, ‘சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கெவின் ஸ்பேசி.

கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனையும் பெற்றார்.இதனால் அவர் நடித்துக் கொண்டிருந்த பல திரைப்படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு எங்கும் தலைகாட்டாமல் இருந்தவர் சமீபத்தில் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார்.

அதில் ”அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னுடைய உலகமே ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. என்னுடைய வேலை, என்னுடைய உறவுகள், திரைத்துறையில் எனக்கான மரியாதை என அனைத்தையும் சில மணிநேரங்களில் இழந்துவிட்டேன்.

இந்தச் சம்பவத்தில் என்னால் ஒருவருடைய உலகம் எப்படி திடீரென்று இயங்குவதை நிறுத்தும் என்று புரிந்துகொள்ள முடிந்தது . அதே போல திடீரென் நம்மிடம் வந்து ‘நீங்கள் இனிமேல் நடிக்கமுடியாது’ என்றோ அல்லது ‘உங்களுக்கு வேலை போகப் போகிறது’ என்றோ கூறுவது எப்படி இருக்கும் என்பதையும் நான் உணர்ந்தேன்.என கெவின் ஸ்பேசி கூறியுள்ளார்.