கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் KGF படத்தின் இரண்டாவது பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

KGF முதல் பாகம் கன்னடம் , தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது . கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது .

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து KGF இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.