‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

--

கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது .

இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்துக்குரிய எதிர்பார்ப்பு அதிகமானது. இதில் வில்லனாக சஞ்சய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

தற்போது ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு சாம்ராஜ்ஜியத்தை மறுகட்டமைக்கும்போது’ என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த போஸ்டர். பலரும் ‘சலாம் ராக்கி பாய்’ என்று பகிர்ந்து வருகின்றனர்.