‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு….!

கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது .

‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகிய நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. அதன்படி அக்டோபர் 23-ம் தேதி அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.