கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது .

‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில் பிரசாந்த் நீல் இயக்க, இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நடிகர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் ரமீகா சென் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ரவீனா டண்டன் நடித்துள்ளார்.

இந்நிலையில் கே.ஜி.எஃப் படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு இந்த டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ஒரு புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.