அறிவித்த தேதியில் வெளியாகுமா ‘கே.ஜி.எஃப் 2’ …..?

 

கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது .

‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகிய நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

அக்டோபர் 23-ம் தேதி அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர் .

கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனால் அதே தேதியில் வெளியீடு சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும்.

இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. அதில் 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு.

இந்த சண்டைக் காட்சிகள் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துக் காட்சிகளும் பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 23-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு தீவிரமாக இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி