உலகின் மிகக் குள்ளம்: கின்னஸ் சாதனையாளர் தபா மகர் காலமானார்!

காத்மாண்டு:

நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதரும், கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர் (வயது 27) காலமானார். கடந்த சில நாட்களாக  நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனைக்க சொந்தமானவர்  நேபாளத்தை சேர்ந்த 27 வயதான ககேந்திர தபா மகர்.

1992 ஆண்டு அக்டோபர் மாதம் 14ந்தேதி பிறந்த மகர் தனது 18வயது வயதில் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார். அவரது  உயரம், 67.08 செ.மீ.,; எடை 6 கிலோ மட்டுமே.

கடந்த சில நாட்களாக , நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தபா மகர், பெகாராவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஜன., 17) மதியம் 3 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகிச் சிறய மனிதராக அறிவிக்கப்பட்டபோது 67.08 செ.மீட்டர் உயரமும், 6 கிலோ எடையும் கொண்டவராக இருந்தார் மகர். கடந்த ஆண்டு , 54.6 செ.மீட்டர் உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட பிலிபைன்ஸை சேர்ந்த ஜூன்ரேவிடம் உலகின் மிகச் சிறிய மனிதர் என்ற பட்டத்தை மகர் இழந்தார். உலகின் மிகச் சிறிய மனிதரான ககேந்திர தபா மகர் 12 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சிகளில் பிரபலமாக பேசப்பட்டவர். இந்தியாவைச் சேர்ந்த மிகச் சிறிய பெண்ணான ஜோதி அம்ஜ் உள்பட, உலகெங்கிலும் உள்ள மற்ற சிறிய மனிதர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.