” கலீல் அஹமது, ராயுடு இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் ”- கோலி, ரவிசாஸ்திரி புகழாரம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலீல் அஹமது, ராயுடு ஆகியோர் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் என கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

kohli

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி, 2-0 என கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-1 என்ற நிலையில் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது.

இன்று நடந்து முடிந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்திய வீரர்கள் கலீல் அஹமது, ராயுடு ஆகியோர் இந்த தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் என இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ‘ இத்தொடருக்கு முன்பாக இரண்டு இலக்குகள் நிர்ணயித்தோம். பேட்டிங்கில் 4வது இடமும், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் தேர்வும். இந்த இரண்டும் இத்தொடரில் கிடைத்து விட்டது. கலீல் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கில் ராயுடு 4வது இட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இவர்கள் இருவரும் தற்போது இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் ’ என்றார்.

இதேபோல பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக்கு பின் அணியில் இடம் பெற்ற ராயுடுவை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. கலீல் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திவிட்டார் ’ என புகழ்ந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-