டில்லி

த்துவாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடிய வழக்கறிஞர் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.

கடந்த 2018ஆம் வருடம் ஜனவரி மாதம் கத்துவாவை சேர்ந்த ஒரு சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.  இந்த கொலைக் குற்றவாளிகள் மீது தொடரப்பட்ட வழக்கில் சிறுமியின் குடும்பத்துக்காக வழக்கறிஞர் ஃபரூக்கி என்பவர் தலைமையில் ஆஜரானார்கள்.  இவர்களில் தாரிக் மன்சூர் அலாம் என்பவரும் ஒருவர் ஆவார்.   சென்ற வருடம் ஜூன் மாதம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

தற்போது மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.  நாடெங்கும் இருந்து இந்த போராட்டத்தில்  கலந்துக் கொள்ள வந்துள்ள விவசாயிகள் டில்லி எல்லையில் முகாமிட்டு தங்கி உள்ளனர்.  கடந்த 12 நாட்களாக இங்கு தங்கி உள்ள இவர்களுக்கு சமுதாய உணவுக்கூடம் அமைக்கப்பட்டு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த சமுதாயக் கூடத்தை தாரிக் மன்சூர் அலாம் நடத்தி வருகிறார். இவர் வழக்கறிஞர் பணியுடன் மலெர்கோடா பகுதியில் ரியல் எஸ்டேட் பிசினெஸ் நடத்தி வருகிறார். இந்த சமுதாயக் கூடத்தில் 35 முதல் 40 பெரிய அண்டாக்களில் பிரியாணி தயாரித்து வழங்கி வருகிறார்.  அவருடைய சேவையை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.