கொல்கத்தா: ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டாகிளாஸ்) வேடமணிந்து சென்று, அவர்களுக்குப் பரிசளித்து மகிழ்வித்த இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலியின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

அவர் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாண்டா கிளாஸ் வேடமணிந்து, அடையாம் காண முடியாத வகையில், கொல்கத்தாவில் அமைந்த ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு சென்றார் விராத் கோலி. அங்கேயுள்ள குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்வித்தார்.

அப்போது, அந்தக் குழந்தைகளின் விருப்பங்களுள் ஒன்றாக, கிரிக்கெட் வீரர் விராத் கோலியைக் காண்பதும் இருந்ததை அறிந்தார் சாண்டா கிளாஸ் வேடத்திலிருந்து கோலி.

உடனே, தனது வேடத்தைக் கலைத்து, குழந்தைகளின் முன்னர் நின்றார். தங்கள் முன்பாக நிஜமான விராத் கோலியே வந்திருப்பதை அறிந்த குழந்தைகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விப்பதற்காக தனது நேரத்தை செலவழித்து, அவர்களுக்குப் பரிசு பொருட்களையும் வழங்கிய கோலிக்கு, பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.