அனைத்துவகை கிரிக்கெட்டிலும் தரவரிசையில் 10 இடங்களுக்குள் வரும் விராத் கோலி!

துபாய்: டி-20 உலக பேட்டிங் தரவரிச‍ையில் இந்தியாவின் கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் நீடித்திருக்க, விராத் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார் கோலி.

டி-20 தரவரிசையில், பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் என்ற வகைப்பாடுகளில், உலகளவில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றிருக்கும் இந்திய வீரர்கள் இந்த இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் முதலிடத்தில், டாவிட் மாலன்(915 புள்ளிகள்) மற்றும் பாபர் ஆஸம்(820) ஆகியோருக்கு அடுத்து மூன்றாமிடத்தில் உள்ளார். ராகுல் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 816 ஆகும்.

விராத் கோலி பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 697. இந்தியாவின் விராத் கோலி, ஒருநாள் பேட்டிங்கில் முதலிடத்திலும், டெஸ்ட் பேட்டிங்கில் இரண்டாமிடத்திலும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. மொத்தமாக, மூன்றுவகை கிரிக்கெட்டிலும் விராத் கோலி முதல் 10 இடங்களில் உள்ளார்.