விரைவாக 11,000 ரன்களைக் கடந்த கேப்டன் – வேறுயார்? நம்ம கோலிதான்..!

புனே: இந்தியக் கேப்டன் கோலி, தனது சாதனைகள் வரிசையில் மற்றொன்றையும் சேர்த்துக்கொண்டுள்ளார். அணியின் கேப்டனாக சர்வதேச அரங்கில் 11,000 ரன்களை விரைவாகக் கடந்தவர் என்ற சாதனைதான் அது!

அதாவது, அனைத்துவகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 11,000 ரன்களை எடுப்பதாகும் இந்த சாதனை. கோலி இந்த மைல்கல்லை எட்டுவதற்கு 196 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டு முதலிடம் பெற்றார்.

இலங்கை அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது டி-20 போட்டியின்போது இந்த சாதனையைப் படைத்தார் விராத் கோலி.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் ஒரு கேப்டனாக 11,000 ரன்கள் என்ற இலக்க‍ை எட்ட 253 இன்னிங்ஸ்கள் அவருக்குத் தேவைப்பட்டது. தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஸ்மித்திற்கு 265 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது.

அவர்கள் இருவரும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. விராத் கோலியை சேர்த்து இச்சாதனையை மொத்தமாக 6 பேர் செய்துள்ளனர்.

மகேந்திரசிங் தோனி, ஆலன் பார்டர் மற்றும் ஃபிளமிங் ஆகியோர் அந்த சாதனையாளர்கள் பட்டியலில் அடக்கம்!