பாஜகவுக்காக டிவிட்டரில் பெயரை மாற்றிய குஷ்பு

சென்னை

டிகை குஷ்பு தனது டிவிட்டர் கணக்கில் பெயரை மாற்றி உள்ளார்.

நடிகை குஷ்பு டிவிட்டரில் எப்போதும் பிசியாக இருப்பவர் .   அங்கு அவரைப் பற்றி எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் சமாளித்து உடனடியாக அதற்கு பதிலடி கொடுத்து அசத்துவார்.

டிவிட்டர் அக்கவுண்டில் அவர் ’குஷ்புசுந்தர்; என்னும் பெயரில் இயங்கி வந்தார்.  தற்போது அவர் தனது பெயரை மாற்றி உள்ளார்.  அவரது இயற் பெயர் நக்கத் கான்.   அதனால் தனது டிவிட்டர் அக்கவுண்டில் தனது நிஜப் பெயரை ’நக்கத் கான்’ என மாற்றி பாஜகவுக்காக என குறிப்பிட்டுள்ளார்.

குஷ்பு தனது பதிவில்,  “எனது இயற்பெயரை நான் மறக்கவில்லை.  மறுத்ததும் இல்லை.  இனிமேல் பாஜகவினருக்கு மட்டும் என் பெயர் நக்கத் கான்” என குறிப்பிட்டுள்ளார்.