அரசரான இளவரசர் : மு க ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து

சென்னை

திமுக தலைவராக மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுக தலைவர் பதவி காலியாக இருந்தது.   இதை ஒட்டி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அப்போதைய திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு க ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.   வேறு யாரும் போட்டி இடாததால் ஸ்டாலின் திமுக தலைவராகி உள்ளார்.

அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தேசிய தலைவர்களும் மாநிலக் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.    காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை வாழ்த்தி உள்ளார்.

நடிகை குஷ்பு, “ஒரு இளவரசர் அரசராகி உள்ளார்.  எனது மனமார்ந்த வாழ்த்துக்களை திமுக தலைவரான மு க ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.    உங்களை தமிழக மக்கள் தங்களின் எதிர்காலமாக பார்க்கிறார்கள்.   நீங்கள் விரைவில் தமிழகத்தை வழிநடத்துவீர்கள் என நம்புகிறோம்.   ஒன்றாக இணைந்திருந்தோம், இனியும் இணைந்திருப்போம்.  வாழ்த்துக்கள்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.