குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

சென்னை

டிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

திரையுலகில் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் நடிகை குஷ்பு.   இந்தித் திரையுலகில் இருந்து தென் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.   இவர் அரசியலிலும் தன் பணியை ஆற்றியவர்.   முதலில் தி மு க வில் இருந்த இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பணியை தொடர்ந்து வருகின்றனர்.

குஷ்புவுக்கு அடிக்கடி வயிற்றில் வலி வந்து மிகவும் அவதிப்பட்டு வந்தார்.  பரிசோதனையில் குஷ்புவின் வயிற்றில் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.   மாத்திரை சாப்பிட்டும் அவருக்கு வயிற்று வலி குணம் அடையவில்லை.   இதை தொடர்ந்து குஷ்புவின் வயிற்றில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் நேற்று குஷ்பு அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவர்கள் இன்று வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றிக் கொண்டு உள்ளனர்.   அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இரண்டு வாரம் குஷ்பு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளதால் அவருடைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும்,  இரு வாரங்களுக்குப் பிறகு அவர் தனது வழக்கமான பணிகளை தொடருவார் எனவும் குஷ்புவின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.