கைது செய்யப்பட்ட குஷ்பு டிவிட்டரில் ஆவேசம்

சென்னை

ன்று கைது செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு கைதுக்குப் பிறகு டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

மனுஸ்மிருதிக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை ஒட்டி பாஜகவினர் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  சிதம்பரம் பாஜக மகளிர் அணியினர் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.  அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ள சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு காரில் சிதம்பரத்துக்குச் சென்றார்.  முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.  கைதுக்குப் பிறகு குஷ்பு தனது டிவிட்டரில் பதிவுகள் இட்டு வருகின்றார்..

குஷ்பு, “விடுதலை சிறுத்தைகள் கோழைகள்.  அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம், இது அவர்கள் தோல்வி, நாங்கள் தலைவணங்கப் போவதில்லை.  ஓடி இந்த மண்ணில் உள்ள அவரது ஒவ்வொரு மகளுடைய மரியாதையையும் உறுதி செய்ய அடி எடுத்துள்ளார்.  ஆனால் விசிகவினருக்கு பெண்களை மதிப்பது அந்நியமாகத் தெரிகிறது” என பதிந்துள்ளார்.

அடுத்த பதிவில் குஷ்பு, “கடைசி மூச்சு உள்ளவரை நாங்கள் பெண்களின் மரியாதைக்காகப் போராடுவோம்.  எங்கள் மதிப்புக்குரிய பிரதமர் மோடி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றியே பேசி வருகிறார். நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம்.  நாங்கள் சிலருடைய அராஜகங்களுக்குத் தலை வணங்க மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.