மகளை கிண்டல் செய்தவரை விமர்சித்த குஷ்பு….!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு .சுந்தர் சியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு என் பேபி டால் அனந்திதா சுந்தர் என்று தெரிவித்திருந்தார்.

 

சிலர் அனந்திதாவின் உருவத்தை வைத்து கேலி செய்தனர்.அதில் குறிப்பாக ஒருவர் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதனை கண்டு கோபமடைந்த குஷ்பூ பன்னி முதலில் உன் மூஞ்சியை கண்ணாடில பாரே… நாய் கூட பார்க்காது… வாந்தி எடுத்துட்டு போயிடும்… என்றார். இதையடுத்து அந்த நபர் தன் ட்வீட்டை நீக்கிவிட்டார்.

 

கிண்டல் செய்த நபரின் புகைப்படத்தை திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கேவலமாக கமெண்ட் போட்ட அந்த நபரை பணியமர்த்தியுள்ள நிறுவனம் அவர் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கும்படி தயவு செய்து அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி