சமூகவலைத்தளத்தில் கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை குஷ்பு….!

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர்.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு.

தற்போது கண்ணில் காயத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி, சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அக்கறையுடன் நலன் விசாரித்து வருகின்றனர்.