‘அந்நியன்’ இந்தி ரீமேக்கில் நாயகியாக கியாரா அத்வானி….?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், படத்தின் கதைக்கான உரிமையை சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியதாக ஷங்கருக்கு அந்நியன் கதையில் எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு ஷங்கர், படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது. படத்தின் டைட்டிலிலேயே அப்படித்தான் வருகிறது. சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படத்தின் கதை எனக்கே சொந்தம் என கூறினார்

இறுதியில் அந்நியன் கதை ஷங்கருக்கே சொந்தம் என்பது உறுதியானதால் அதன் இந்தி ரீமேக்கிற்கு எந்த தடையுமில்லை.

இந்நிலையில் ஷங்கர் தனது அந்நியன் இந்தி ரீமேக்கில் கியாரா அத்வானியை நடிக்க வைக்க அவரை அணுகியுள்ளார்.