விஜய் – லோகேஷ் கனகராஜ் படத்தில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இதனை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரியவுள்ளனர். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கி, ஜனவரி 2020-க்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.