விக்ரம் பத்ராவின் உண்மைக் கதை ‘ஷெர்ஷா’ ; அதிகாரபூர்வ அறிவிப்பு…!

கார்கில் போர் நாயகன் விக்ரம் பத்ராவின் உண்மைக் கதையை இந்தியில் படமாக்குகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

கார்கில் போரின்போதே வீர மரணம் அடைந்த இவருக்கு இந்திய அரசாங்கம் ‘பரம் வீர் சக்ரா’ வழங்கி கவுரவித்துள்ளது.

‘ஷெர்ஷா’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில், சித்தார்த் விக்ரம் பத்ராவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை, கரண் ஜோஹர், ஹைரோ ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷபீர், அஜய் ஷா மற்றும் ஹிம்மன்சூ காந்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Biopic, Kiara Advani, Param Vir Chakra, Shershaah, Vikram Batra
-=-