ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘சந்திரமுகி 2’ படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்….!

--

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம், ‘சந்திரமுகி’. இதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், மாளவிகா, நாசர், உட்பட பலர் நடித்திருந்தனர்

இயக்குனர் வாசு, சந்திரமுகி படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை தான் உருவாக்கி விட்டதாகக் கூறி இருந்தார்.

இதற்கிடையே கொரோனா லாக்டவுன் நேரத்தில், பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில், தான் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் இருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு வழங்கினார்.

இந்நிலையில் கியாரா அத்வானி, சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.