நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருக்கும் நடிகர் கிச்சா சுதீப்…..!

--

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நிலவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பல திரை நட்சத்திரங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னடத் திரையுலகில் பிரபல நடிகரான கிச்சா சுதீப் (‘நான் ஈ’, ) கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் நான்கு பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை தருவதோடு, ஆசிரியர்களின் சம்பளச் செலவுகளையும் சுதீப் ஏற்றுள்ளார்.