ராஜமவுலி இயக்கிய ’நான் ஈ’ படத்தில் வில்லனாக கலக்கிய கிச்சா சுதீப் தற்போது கன்னடத்தில் பாட்ஷா என்ற பட்டப் பெயருடன் ஹீரோவாக கலக்கி வருகிறார். அவருக்கு இன்று 47 வது பிறந்த தினம் ரசிகர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.

பிறந்த தினத்தை யொட்டி சுதீப் நடித் துள்ள கன்னட படமான ‘கோட்டிகோபா 3’படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மடோனா செபாஸ்டின் கிளாமர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தை சிவகார்த்தி டைரக்டு செய்திருக்கிறார். கே3 டீஸரை தற்போது இணைய தளத்தில் ரசிகர்கள் வைர லாக்கி வருகின்றனர்.

இதே நாளில் கிச்சா சுதீப்பின் ’பேந்தம்’ படத்தின் டீஸர் வெளியாகவிருந்தது. ’கோட்டிகோபா3’ டீஸர் ரிலீஸ் ஆகி இருப்பதால் தேதி குறிப்பிடாமல் ’பேந்தம்’ பட டீஸர் ரிலீஸ் தள்ளி வைக் கப்படுகிறது என இப்படத்தின் இயக் குனர் அனூப் பண்டாரி தெரிவித்தி ருக்கிறார்.