பிரெஞ்ச் ஓப்பன் பாட்மின்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன்

பாரிஸ்:

பிரெஞ்ச் ஓப்பன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கோப்பை வென்று அசத்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் உலகின் 4ம் இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்ட்டா நிஷிமோட்டோவை, 21:-14, 21-:13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.