சென்னை:

சுங்கச்சாவடி வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அவர், புழல் சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். வைகோ அவரை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சோதனையில் தெரிய வந்ததை தொடர்ந்து,  அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேல்முருகன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது அவரது கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.