ட்லாண்டா

ந்தை கைது செய்யப்பட்டதால் சிறுநீரகம் மாற்று அறுவைச் சிகிச்சை தடை செய்யப்பட்ட குழந்தைக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது.

அட்லாண்டாவை சேர்ந்த தம்பதியர் ஆண்டனி டிக்கர்சன் மற்றும் கார்மெல்லா பர்கெஸ்.  இவர்களின் இரண்டு வயது ஆண் குழந்தை ஏ ஜே பர்கெஸ்.   இந்த குழந்தைக்கு பிறந்தது முதலே சிறுநீரகங்கள் செயல்படாமல் இருந்துள்ளது.  பல மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே குழந்தையின் உயிரைக் காக்கும் என கூறி விட்டனர்.

சரியான சிறுநீரகத்தை தேடிய போது அந்த குழந்தையின் தந்தையின் சிறுநீரகம் நன்கு பொருந்தி உள்ளது.  எனவே அந்தக் குழந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தயார் செய்தனர்.   இந்நிலையில் பயணத்தின் போது ஆயுதங்களை எடுத்துச் சென்ற குற்றத்தில் ஆண்டனி டிக்கர்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   சட்டப்படி சிறுநீரக தானம் செய்பவருக்கு எந்தக் குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது என்பதால் அறுவை சிகிச்சை மறுக்கப்பட்டது.

குழந்தைக்கு உடனடியாக சிறுநீரகம் மாற்றவில்லை எனில் மரணம் அடையும் என மருத்துவர்கள் கூறி விட்டனர். குழந்தையின் தந்தை பரோலில் அறுவைச் சிகிச்சை அன்று விடுவிக்கப் பட்டார்.  ஆனால் பரோலில் அவர் 90 நாட்கள் இருக்க வேண்டும் எனவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின் 90 நாட்கள் அவர் பரிசோதிக்கப் பட வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.  தனது உடல்நிலையைப் பற்றி கவலை இல்லை எனவும் அறுவை சிகிச்சை நடந்தால் போதும் எனவும் தந்தை கூறியதை நிர்வாகம் ஏற்கவில்லை.

திடீரென மருத்துவமனையிடம் இருந்து பெற்றோருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.  மரணமடைந்த ஒருவர் தானம் கொடுத்துள்ள ஒரு சிறுநீரகம் கிடைத்துள்ளதாக கூறி இரண்டு மணி நேரத்தில் பரிசோதனை முடித்து உடனடியாக  சிறுவனுக்கு மாற்று சிறுநீரகம் உடனடியாக பொருத்தப்பட்டது.  இறந்தவர்களின் உடலில் எடுத்து பொருத்தப்படும் சிறுநீரகம் வேலை செய்ய ஆரம்பித்து சிறுநீர் வெளிப்பட நேரம் ஆகும் என எதிர்பார்த்திருந்த வேளையில் சிறுவனின் உடலில் இருந்து சிறுநீர் வெளியாகி உள்ளது.   இதனால் பெற்றோரும் மருத்துவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.