டில்லி:

த்தரபிரதேச மாநிலம்,  கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வெறும் துயரமல்ல, மாபாதக படுகொலை என்று நோபல் பரிசு வென்ற குழந்தைகள் நலஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தி கூறியுள்ளார்.

உத்திர பிரதேசதம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானார்கள்.

மூளை வீக்கம் பிரச்னையால் குழந்தைகள் உயிரிழந்தாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால் தான் குழந்தைகள் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கைலாஷ் சத்தியார்த்தி

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவம் உ.பி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  குழந்தைகள் மரணம் குறித்து விசாரனை நடத்திய கோரக்பூர் மாவட்ட நீதிபதி ராஜீவ் ரவுட்லா தலைமையில் விசாரணைக் குழு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாகத்தான் குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்று அறிக்கை அளித்திருந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சோக சம்பவம் குறித்து பிரபல குழந்தைகள் நல ஆர்வலரும், நோபல் பரிசு வென்றவரும் ஆன கைலாஷ் சத்தியார்த்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

30 குழந்தைகள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் இறந்துள்ளனர்.  இது வெறும் துயரச் சம்பவம் மட்டுல்ல, இது ஒரு படுகொலை. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் நாம் குழந்தைகளுக்காக என்ன செய்துள்ளோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தை உருவாக்கி வருகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை கல்லூரியில் கடந்த 5 நாளில் 72 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கடந்த 2012 முதல் தற்போது வரை 3 ஆயிரம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.