‘கொலை செய்யுங்க… நான் பார்த்துக்கொள்கிறேன்’: மாணவர்களிடம் வன்முறையை தூண்டிய உ.பி. பல்கலைக்கழக துணைவேந்தர் (வீடியோ)

லக்னோ:

பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில், கல்லூரி ஒன்றின் துணைவேந்தர், மாணவர்களிடையே பேசும்போது… தகராறு ஏற்பட்டால்… அழுதுகொண்டு வராதீர்கள்… அவர்களை கொன்றுவிட்டு வாருங்கள்… நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பேசி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரியின் துணைவேந்தரே மாணவர்களிடையே வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூரில் உள்ளது வீர் பகதூர் சிங்  பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து வருபவர் ராஜாராம் யாதவ். இவர் காசிப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களிடையே பேசினார். அப்போது, பூர்வாஞ்சல் பல்கலைக்கழக மாணவர்கள், தகராறு ஏற்பட்டால் எதிரிகளை அடித்து வீழ்த்துங்கள் அல்லது கொல்லுங்கள்…. ஆனால் அழுது கொண்டு மட்டும் தன்னிடம் வராதீர்கள்… அதனால் ஏற்படும் பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.. அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களிடையே ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய துணைவேந்தர், மாணவர்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. துணைவேந்தர் ராஜாராமை பதவி விலக்குமாறு மத்தியஅரசை  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Video Credit: ANI Twitter

 

You may have missed