மும்பை,

ருத்துவமனைக்கு வராமல் விடுமுறை எடுத்து வரும் டாக்டர்கள்  நக்சலைட்டுடன் சேரட்டும், அவர்களை சுட்டுக் கொல்கிறோம்’  என்று மத்திய அமைச்சர் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், சந்தரபூர் நகரில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மெடிக்கல் ஷாப்பை மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தொடங்கி வைத்தார். அபபோது அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பல மருத்துவர்கள் விழாவில் பங்கேற்காமல் விடுமுறையில் இருந்தனர்.

இதுகுறித்து அறிந்த அமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் மிகுந்த கோபமடைந்தார்.  அங்கிருந்த அதிகாரிகளிடம், “ ஜனநாயக அமைப்பில் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் பங்கேற்கும் விழாவில் டாக்டர்கள் வராமால் புறக்கணித்திருப்பது முறையா என்றும்,   நிகழ்ச்சிக்கு வராமல் டாக்டர்களை தடுத்தது என்ன? என்று கோபமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், நக்சலைட்டுகள்  ஜனநாயகமே இருக்க கூடாது என்று கோரி வருகிறார்கள். அதுபோல இன்று விடுமுறை எடுத்துள்ள மருத்துவர்களும், ஜனநாயகம் தேவையில்லை என்றால்ர  அவர்களுடன் (நக்சலைட்டுகளுடன்) சேரட்டும் என்று கூறினார்.

மேலும், மருத்துவர்கள் ஏன்  மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள்,  ஏன் நோயாளிகளுக்கு மாத்திரைகள் கொடுக்கிறார்கள்? அவர்கள்   நக்சலைட்டுகளுடன் போய் டாக்டர்கள் சேரட்டும், அவர்களுக்கு குண்டுகளை பரிசாக அளித்து சுட்டுக் கொல்கிறோம்’’ என்று பேசினார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு, விழாவில் கலந்துகொண்ட சக மருத்துவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தான் பேசியது குறித்து விளக்கம் அளித்து  அவர் கூறியதாவது-

நான் டாக்டர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். நான் பங்கேற்க வந்திருந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் வரவில்லை. அந்த ஒரு டாக்டர் மீதுதான் கோபப்பட்டேன், ஒட்டுமொத்த டாக்டர் மீது அல்ல. என் ஆழ்மனதில் டாக்டர் மீது அதிகமான மரியாதை வைத்து இருக்கிறேன். அன்றைய நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்த டாக்டர்கள் மீது எனது ஆதங்கத்தைதான் தெரிவித்தேன்’’ எனத் தெரிவித்தார்.