ஐதராபாத்,

மியான்மரை சேர்ந்த ரோங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில், இந்திய அரசு ரோங்கியா அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியது.

மத்தியஅரசின் இந்த அறிவிப்பு ரோங்கியா அகதிகளிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்களை தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதைவிட கொன்றுவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மியான்மரில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக, அங்கு வசித்து வந்த ரோங்கியா முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களில் அவர்களில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவினர்.

இப்படி அடைக்கலமாக இந்தியாவுக்கு  வந்து குடியேறியவர்கள் ஜம்முவிலும், ஹைதரா பாத்திலும் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் மீண்டும் மியான்மர் திரும்பவே விரும்புகின்றனர். அவர்களால் இந்திய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக  அவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இந்திய அரசு அறிவித்தது.

இது ரோங்கியா அகதிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான ரோங்கியா முஸ்லிம்கள் மீண்டும் மியான்மர் திரும்புவதை எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து ஐதராபாத்தில் வசித்து வரும் அகதியான அப்துல் ரஹீம் என்பவர் கூறியதாவது,

 

எங்களுக்கு தங்குவதற்கு அனுமதிப்பதற்காக இந்தியாவுக்கு நன்றி. அரசாங்கம் எங்களை வெளி யேற்ற விரும்புகிறது என்றால், அதை செய்ய முடியும், ஆனால் எங்களை இங்கிருந்து அனுப்புவதை விட, எங்களையே இங்கேயே  கொன்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று உணர்ச்சி ததும்ப கூறினார்.

இந்திய அரசின் அறிவிப்பு காரணமாக ஐதராபாத்தில் வசிக்கும் 3,800 க்கும் மேற்பட்ட  ரோங்கியா முஸ்லிம்களின் முகங்களில் கவலை அதிகரித்துள்ளது.

மீண்டும் மியான்மருக்கு திரும்பினால், தாங்கள் துன்புறுத்தப்படுவோம் என்றும், ஆகவே மியான்மருக்குத் திரும்புவதைவிட, எங்களை இங்கேயே கொன்றுவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஐதராபாத்தில் வசித்து வருவதாகவும்,  நாங்கள் மீண்டும் எங்களது தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை. இதுகுறித்து இந்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம்  என்று கூறி உள்ளனர்.

இதுகுறித்து ரகீம் என்ற அகதி கூறும்போது, தனக்கு 32 வயது ஆகிறது. மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் ஐதராபாத்தில் வசித்து வருகிறேன் என்றும், நாங்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பட்டடால் எங்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி உள்ளார்.

மற்றொரு அகதியான, 63வயதா  முகமது யூனூஸ் கூறும்போது, மியான்மரில் புத்த மதத்தினரே மெஜாரிட்டியாக இருக்கின்றனர் . அதன் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்பட்டு நாங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தோம் என்றும், இங்கு வந்த பிறகு தற்போது 3வது தடவையாக எங்களை தங்களது சொந்த நாட்டுக்கு செல்ல அரசு வலியுறுத்தி வருகிறது என்று கூறினார்.

இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இங்க வசித்து வருகிறார். மியான்மரில் ஏற்பட்ட பிரச்சினையின்போது, மியான்மர் ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பி வந்ததாகவும், அப்போது தனது தோளில் குண்டு பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இவரது தோளில் குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் உள்ளது.

தனது இரண்டு சகோதரர்களும் பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்றும், எங்களது சொத்துக்களை மியான்மர் அரசு அபகரிதத்துகொண்டதாகவும் கூறினார்.

மேலும் எங்கள் பகுதியை சேர்ந்த மேலும் 125 குடும்பத்தினர் ஜம்முவில் இருப்பதாகவும் எங்களது துன்பங்களுக்கு முன்வே இல்லை என்றும் கூறினார்.

தற்போது ஐதராபாத்தில் 500 ரூபாய் தினசரி சம்பளத்தில் கூலி வேலை செய்து வருவதாகவும், இந்தவேலையும் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே கிடைப்பதாகவும், சிறு குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் கூறினார்.

எங்களை மீண்டும் மியான்மருக்கு அனுப்பும் முடிவை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மியான்மரை சேர்ந்த ரோங்கியா அகதிகள் ஜம்முவுக்கு அடுத்தபடியாக ஐதராபாத்தில் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

சுமார் 7000 குடும்பத்தினர் ஐதராபாத்தின், பலாபூர், ஷாகின் நகர், ஜலபள்ளி, ஆசாத் பாபாப நகர் போன்ற பகுதிகளில் குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

இந்தியாவில் 16000 ரோங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வருவதாக  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் புத்த மதத்தினருக்கும், ரோங்கியா இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அவர்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றனர். ஒரு பகுதியினர் இந்தியாவிற்குள் ஊடுருவினர். அவர்கள் இந்தியாவில் ஜம்முவிலும், ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர்.

ஜம்முவில் இவர்களுக்கு தனியே ஒரு அகதி முகாம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.