நம்ம ஊரில் ஆங்காங்கே ரத்தக் காட்டேரியைக் கண்டதாகவும், கொள்ளிவாய் பிசாசு உலவுவதாகவும் அவ்வப்போது பீதியை கிளப்பிவிடுவார்கள். இதுபோல அமெரிக்கா மற்றும் கனடாவில் கில்லர் க்ளெளன்கள்(கோமாளிகள்) ஆங்காங்கே உலவுவதாகவும் அவர்கள் சிறு பிள்ளைகளை பிடித்துச் செல்வதாகவும் வதந்திகள் கிளம்பியுள்ளது.
clowns2
கில்லர் க்ளெளன்ஸ் பற்றி அதிகம் கற்பனை கதைகள் எழுதும் பெஞ்சமின் ராட்ஃபோர்ட் என்பவர் இதுபற்றி சொல்லும்போது கில்லர் க்ளெளன்ஸ் என்பது வெறும் கற்பனையே என்கிறார். அவரது கூற்றுப்படி கில்லர் க்ளெளன்ஸில் ஸ்டாக்கர் க்ளெளன்ஸ் மற்றும் ஃபாண்டம் க்ளெளன்ஸ் என்று இருவகை உள்ளதாம்.
ஸ்டாக்கர் க்ளெளன்ஸ் என்பது கோமாளி வேடமிட்ட மனிதர்களாவர், இவர்கள் பெரும்பாலும் யாரையாவது குறிப்பாக சிறு குழந்தைகளை பயமுறுத்தி அதில் இன்பம் காண்பவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கட்டிநெள என்ற பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் கில்லர் க்ளெளன்ஸ் வேடமிட்டு குழந்தைகளை பயமுறுத்திய சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

clowns1

மேலும் 2013-இல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு திரையுலக பிரபலம் கில்லர் க்ளெளன் வேடமிட்டு அதை படமெடுத்து முகநூலில் பதிய அது பிரபலமாகி பல நாடுகளிலும் அதுபோல செய்யத் தொடங்கிவிட்டனர். இதன் விளைவாக கில்லர் க்ளெளன்ஸ் வேடமிட்டு கையில் ஆயுதங்களுடன் தெருவில் செல்வோரை பயமுறுத்திய 14 டீன் ஏஜ் இளைஞர்களை பிரஞ்சு போலீசார் கைது செய்தனர். இவர்களைப் போன்றவர்கள் ஒரு குரூரமான அற்ப சந்தோஷத்துக்காக இப்படி செய்வார்களேயன்றி இவர்களால் எந்த ஆபத்தும் இல்லை.
இரண்டாம் வகையான ஃபாண்டம் க்ளெளன்ஸ் என்பது க்ளெளன்ஸ் வேடமிட்ட மனிதர்கள் இல்லை. இது முழுக்க முழுக்க வதந்தியாகும். இது கவலை மற்றும் பயத்தினால் உருவாக்கப்படும் பிம்பமாகவும் இருக்கலாம். கில்லர் க்ளெளன்ஸை இங்கே பார்த்தேன் அங்கே பார்த்தேன் என்று சிலர் சொல்வது இதன் காரணமாகத்தான்.
1980-களில் பல பளிக் குழந்தைகள் தங்கள் பள்ளிக்கருகே கில்லர் க்ளெளன்ஸ் வந்து சாக்லேட் கொடுத்து தங்களை தனியே அழைப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அதற்குரிய எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த அசம்பாவிதங்களும் நடந்ததாக குறிப்புகளும் இல்லை.
மொத்தத்தில் கில்லர் க்ளெளன்ஸ் என்பது பயபப்டத்தக்க விஷயமல்ல, அதே நேரத்தில் இதுபோல வேடமிட்டு அடுத்தவரை அச்சுறுத்தும் செயல்கள் கண்டிப்பாக சட்டப்படி தடுக்கப்பட வேண்டும் என்று பெஞ்சமின் ராட்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.