சிறுமியையும் தனது தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது

மும்பை

சிறுமி ஹாசினியையும், தனது தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது செய்யபட்டுள்ளான்

சென்னை போரூரில் ஏழு வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து பின் எரித்துக் கொலை செய்ததாக தஷ்வந்த் என்பவன் கைது செய்யப்பட்டான்.   பிறகு அவன் ஜாமினில் வெளி வந்தான்.    ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது  தாயாரைக் கொன்று விட்டு 25 பவுன் தங்க நகைககளுடன் தலை மறைவானான்.

அவனைக் கண்டுபிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.    அவனுடைய நண்பர்களிடமும் விசாரணை செய்யப்பட்டது.   தலைமறைவாகி ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று மும்பையில் போலீசாரால் தஷ்வந்த் கைது செய்யப்பட்டுள்ளான்.    அவனை விரைவில் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்