டெல்லி:
ந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பலி எண்ணிக்கை 1306 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 17ந்தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போதுதான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொ ரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.   பலியானோரின் எண்ணிக்கை 1,306-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் மிகக் குறைவு. இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக இருப்பது உலகில் மிகக் குறைவு என்றும், இதுவரை கொரோனா நோயிலிருந்து மீண்டு 10,000-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து மீளும் நிலையில் உள்ளனர். கடந்த 14 நாட்களில் இரட்டிப்பு விகிதம் 10.5 நாட்களாக இருந்தது. ஆனால் இன்று இரட்டிப்பு விகிதம் சுமார் 12 நாட்களாக உள்ளது என்று லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் வந்தபோது கூறினார்.
மேலும் உலகிலேயே நம் நாட்டின் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் தான் மிகக் குறைவாக 3.2 சதவிகிதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.