னோய்

மெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தைகளுக்காக இரு நாட்டு அதிபர்களும் வியட்நாம் வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உ மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதை ஒட்டி அடுத்த கட்ட சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கபட்டது.

இந்த இரண்டாம் கட்ட சந்திப்பு இன்றும் நாளையும் வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோய் நகரில் நடத்த தீர்மானம் செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறப்பு ரெயில் மூலம் 4000 கிமீ பயணம் செய்து வியட்நாம் வந்தார். அவருக்கு அரசு சார்பில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கபட்டது.

அதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தந்து ஏர்ஃபோர்ஸ் ஒன் சிறப்பு விமானம் மூலம் பயணம் செய்து ஹனோய் நகருக்கு வந்து சேர்ந்துள்ளார். டிரம்ப் பயணத்தை தொடங்கும் முன்பு தமது இந்த வடகொரிய அதிபருடனான பேச்சு வார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமையும் என நம்புவதக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.