பியாங்யாங்: கொரோனா பரவல் காலத்தில், தனது நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தான் செயல்படவில்லை என்று தனது ஆட்சியில் முதன்முறையாக வடகொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் அந்நாட்டு சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன்.
வடகொரிய கம்யூனிஸ்ட் கட்சியின் 75வது ஆண்டுவிழாவில் பேசும்போதுதான், அவர் மன்னிப்புக் கேட்கும் அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த உரையின்போது, அவர் தனது கண்ணாடியைக் கழற்றி, கண்ணீரை துடைத்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“நமது நாட்டின் மாபெரும் தலைவர்களான கிம் இல்-சங் மற்றும் கிம் ஜாங்-இல் ஆகியோரின் வழிநின்று, இந்த நாட்டை நிர்வகிக்கும் மாபெரும் பொறுப்பை நான் ஏற்றிருக்கும் சூழலில், மக்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நான் செயல்படவில்லை. இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நோய் பரவல் காலத்தில், அவர்களின் சிரமங்களைத் தீர்க்கும் வகையில் நான் செயல்படவில்லை” என்று பேசியுள்ளார்.
தனது உரையில், தென்கொரியாவுடன் ராஜ்ய உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் குறிப்பிட்டவர், அமெரிக்கா குறித்து எந்த நேரடி விமர்சனத்தையும் வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.