உச்ச அதிகார கமிஷனின் தலைவராக மீண்டும் தேர்வான வடகொரிய அதிபர்

பியாங்யாங்: வடகொரியாவின் உட்சபட்ச அதிகார அமைப்பான உள்நாட்டு விவகார கமிஷனின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

கடந்த 2016ம் ஆண்டில், வடகொரிய அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், இந்த உட்சபட்ச அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது முதன்முறையாக அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிம் ஜாங் உன்.

தற்போது மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்த உட்சபட்ச அதிகாரமிக்க கமிஷனின் தலைவராக அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதானது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று வடகொரிய அரசினுடைய அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர் கிம் ஜே ரியோங், அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் அப்பதவியை வகித்தவர் பாக் போங் ஜு.

– மதுரை மாயாண்டி