கிம் கார்டாஷியன்- கான்யே வெஸ்ட் ஜோடி விவாகரத்து செய்ய திட்டம்….!

அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலமும், மாடல் மற்றும் தொழிலதிபருமான கிம் கார்டாஷியன் தனது கணவர் பிரபல பாடகர் கான்யே வெஸ்டை விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக பேஜ் சிக்ஸ் என்கிற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது . நான்கு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது கான்யே வெஸ்டின் கருக்கலைப்புக்கு எதிரான கொள்கைக்காகவும், இரு துருவ நோய்க்காகவும் (bipolar disorder) கிம் கார்டாஷியன் அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.