விளாடிவோஸ்டாக்

ஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வட கொரிய அதிபர் கொரிய தீபகற்பத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவித்தார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ரஷ்யா சென்றார். நேர்று முன் தினம் அவர் ரஷ்ய நாட்டின் கிழக்கூ பகுதியில் உள்ள விளாடிமிர் நகருக்கு சென்றார். அவர் நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் சந்திப்பை நிகழ்த்தினார். இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவி வரும் பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புடின், “வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்புகிறார். அதை உணர்ந்து கொண்ட ரஷ்யா அதர்கு அவருக்கு முழு ஆதரவை அளிக்க தயாராக உள்ளது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பொருளாதார உறவும் இனி மேம்படும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுகும் இடையே அணு ஆயுதங்களை கை விட்வது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு பயணம் செய்து அந்நாட்டு அதிபர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது.