பொதுமக்கள் கவனத்திற்கு: பராமரிப்பு பணி காரணமாக நாளை பல மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை:

ராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல மின்சார ரயில்கள்  நேரம் மாற்றம் மற்றும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது,

எழும்பூர்- புதுச்சேரி இடையே காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை- மேல்மருவத்தூர் இடையே காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மேல்மருவத்தூர்- விழுப்புரம் இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும்.

மின்சார ரயில், விழுப்புரம்- மேல்மருவத்தூர் இடையே பிற்பகல் 1.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மேல்மருவத்தூர்- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரம்- தாம்பரம் இடையே காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம்- விழுப்புரம் இடையே மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்  ரத்து செய்யப்படுகிறது.

அதைப்போன்று புதுச்சேரி- திருப்பதி இடையே நாளை பிற்பகல் 1.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ெசங்கல்பட்டு- திருப்பதி இடையே இயக்கப்படும்.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, அரக்கோணம் இடையே காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்- சென்னை கடற்கரை இடையே நாளை இயக்கப்படும்.

காக்கிநாடா- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

மேலும் சென்னை எழும்பூர்- மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் நாளை காலை 6 மணிக்கு பதில் காலை 6.45 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர்- திருச்சி இடையே 23ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.25 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாளை காலை 8.15 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கு புறப்படும்.

மேலும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே நாளை  காலை 3.55, 4.40, 5, 5.20, 5.55, 6.45, 7.38, 9, 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், அதைப்போன்று சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே காலை 6.30, 7.05 மற்றும் பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. செங்கல்பட்டுக்கு ரத்து செய்யப்படுகிறது.

அதைப்போன்று அரக்கோணம்- சென்னை கடற்கரை இடையே நாளை விடியற்காலை 4.45, 7.30 இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருமால்பூர்- சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

அதைப்போன்று செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே நாளை விடியற்காலை 3.55, 4.35, 4.55, 5.10, 5.50, 6.40, 7, 7.25, 7.50, 8.25, 8.45, 9.40, 10.50, 11.50, 12.15, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்- சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

மேலும் செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே காலை 8.50, 3.20, மணிக்கும், செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே காலை 11.13 மணிக்கும், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

திருமால்பூர்- செங்கல்பட்டு இடையே காலை 7.05, 10.25மணிக்கும், அரக்கோணம்- செங்கல்பட்டு இடையே மாலை 4.45, 8 மணிக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதைப் போன்று சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் ஜூலை 3, 10, 17, 31 ஆகிய ரயில்கள் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாச்சிக்கு சென்றடையும்.

மேலும் சென்னை சென்ட்ரல் இருந்து ஜூலை 6,13,20, 27 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5.45மணிக்கு சென்றடையும்.

அதைப்போன்று புதுச்சேரி- சந்திரகாச்சி இடையே ஜூலை 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் சந்திரகாச்சிக்கு திங்கட் கிழமை காலை 4.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

வடமாநில ரயில்கள் 4 மணிநேரம் நிறுத்தம்

வாலாஜா ரோடு முகுந்தராயாபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அருகில் உள்ள ரயில் நிலையங்களில் 4 மணி நேரம் நின்று புறப்படும்.

26ம் தேதி மட்டும் ரயில்கள் வழக்கம் போல் செல்லும். ஹவுரா- யஷ்வந்த்பூர் வாலஜா ரோட்டில் நிற்கும் லக்னோ-யஷ்வந்த்பூர், ஹவுரா- யஷ்வந்த்பூர், ஜெய்ப்பூர்-கோவை, ஹவுரா- யஷ்வந்த்பூர், காமக்கியா- யஷ்வந்த்பூர், ஹவுரா- யஷ்வந்த்பூர், லக்னோ- யஷ்வந்த்பூர், ஹவுரா- யஷ்வந்த்பூர் அனைத்து ரயில்கள் 4 மணி நேரம் வாலஜா ரோட்டில் நின்று புறப்படும்.

இவ்வாறு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.