வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: இன்றுமுதல் ஒரிஜினல் லைசென்ஸ்!

சென்னை,

மிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் தங்களின் ஒரிஜினில் லைசென்சை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த மாதம் 1ந்தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அரசின் உத்தரவுக்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என தீர்ப்பளித்தது.

அதைத்தொடர்ந்து இன்று முதல் அனைத்து வாகன ஓட்டுநர்களும்  அசல் ஓட்டுநர் உரிமத்தை கைகளில் வைத்திருப்பது கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

அரசின்  புதிய விதிமுறையை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.