புறநகர் ரயில் பயணிகள் கவனம்: நாளை சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து

சென்னை:

ண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜுலை 21ந் தேதி)  சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை தாம்பரம்  மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படு வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஜூலை 21-ம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  இதனால் மதியம் 2 மணி முதல் சென்னை கடற்கலை – வேளச்சேரி வழித்தடத்தில் ரயில் சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை 10.30 முதல் பிற்பகல் 3.10 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும்,

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் இடையே காலை 11 முதல் மதியம் 1.50 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவ தாக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் ரயில்சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.