நெட்டிசன்

#நபாசேதுராமன் முகநூல் பதிவு

#வாழவிடுங்கள்…
வழக்குப்போடுவது, வாகனங்களைப்
பறிமுதல் செய்வது வரை சரி !
தோப்புக்கரணம் போடுவது,
முட்டி போடுவது, டூவீலர்களில் காற்றைப் பிடுங்கி
விடுவது தொடங்கி விதவிதமான தண்டனைகள்
நூதன (?) முறையில் வழங்கப்பட்டு வருகிறது
எல்லாமே மக்கள் உயிர்காக்க
மக்கள் நலன் காக்க என்ற அடிப்படை
கொண்டதாக இருப்பதால்
அது குறித்து பெரிதாய்
கோபம் கொள்வது
இந்தநேரத்தில் நியாயமில்லை…

நேற்று காட்சி ஊடகத்தில் ஒரு காட்சி…
மரம் ஏறச்சொல்லி, ஒரு அதிகாரி சொல்ல
மரம் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்
”அவர்கள்” …
மரம் ஏறுவதில் அவர்களுக்குப் பயிற்சி
இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு விஷயம்…
இன்னொரு விஷயம், மரங்களில்தான்
’நண்டுதொரக்கான்’ கள் அதிகம் வாழ்கின்றன…
அது வாழ்ந்தால் நமக்கென்ன
என்ற கேள்வி எழலாம்…
கொட்டிய உடனே மாரடைப்பை
உண்டாக்கி ஆளைக் கொல்லும்
கொடிய விஷம்
கொண்ட தேள் இனத்தின் ஒருவகைதான்
நண்டுதொரக்கான்…

திருத்துவதற்காகத்தானே தண்டனைகள்…
திருந்தத்தானே தண்டனைகள்…
திரும்பாமல் போவதற்கா தண்டனைகள்…
பார்த்து செய்யுங்க ஆபீசர்ஸ்…