எம்எல்ஏக்கள் கவனத்திற்கு: தொகுதி மக்களுக்காக மூட்டை தூக்கி அசத்திய அசாம் எம்.எல்.ஏ!

கவுகாத்தி.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்காக உணவு பொருட்களை  மூட்டை தூக்கி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அசத்தி உள்ளார்  அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோதி.

இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வடமாநிலங்களில்  பலத்த மழை பெய்து வருகிறது. ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பேய் மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு தத்தளித்து வரும் நிலையில், அசாம் மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.

பழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்களை உயர்வான பகுதிகளுக்கு போகச்சொல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை அசாம் அரசு முன்னெடுத்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தன் முதுகில் சுமந்து சென்று வழங்கி உள்ளார் அந்த தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்.ஏ.

எம்எல்ஏவின் இந்த செயல் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் ரூப் ஜோதி குர்மி.  தொகுதியில் எந்த பிரச்னை என்றாலும் முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பார். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து உள்ளார்.

தற்போது அசாமில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இவர் இல்லாவிட்டாலும், தன் தொகுதி மக்களுக்கு எந்த குறையும் இல்லாமல் ரூப் ஜோதி குர்மி தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள தனது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

அரசாங்கத்தின் சார்பாக நிவாரணப் பொருட்கள் அவரின் தொகுதிக்கு வந்தடைந்ததை.  அதனை,யாருடைய உதவியையும் எதிர்பாராமல், தானே முதுகில் சுமந்து, குடோனில் பாதுகாப்பாக வைத்தார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல் அந்த தொகுதி மக்களிடையே மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜோதியின்   தாயாரும் ஏற்கனவே  இந்த தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

முன்னாள் முதல்வர் தருண் கோகாய் அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக இருந்துள்ளார்.

ஒரு எம்எல்ஏவே முதுகில் மூட்டை சுமந்து சென்ற விஷயம் அசாம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நமது சட்டமன்ற உறுப்பினர்கள், வெள்ளை வேட்டி அழுக்காதவாறு வெள்ளச்சேத பாதிப்பை பார்வையிட்டு, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் ஸ்டைலை காணும்போது…. அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினரின் செயல் பாராட்டுக்குரியதே.