Random image

லுங்கியுடன் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதமாம்! அப்போ சைக்கிள் ஓட்டினால்…

லக்னோ:

லுங்கியுடன் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் என்று புதிய வாகன சட்டத்தில் கூறப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறி உள்ளனர்.

அப்போ பெரும்பாலான இடங்களில் சைக்கிள் ரிக்சாவை இயக்கும் தொழிலாளர்கள் அனைவரும் லுங்கியுடன்தான் வண்டியை ஓட்டி வருகிறார்கள். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுமா என சமுக வலைதளங்களில் நெட்டிஷன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

யோகி தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி செய்து உத்தரபிரதேச மாநிலத்தில், லுங்கியுடன் லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் மாநில போலீசார். இந்த சம்பவம் பரபரப்பையும், போலீசாரின் அடாவடியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில், இளைஞர்கள்  வேட்டி கட்டும் முன் லுங்கி கட்டி பழகுவார்கள். பின்னர் வேட்டியை கட்டி அழகு பார்ப்பார்கள். ஆனால், இன்றைய நவீன யுகத்தில், பெரும்பாலானோருக்கு லுங்கி கட்டத் தெரிவதில்லை.

அதற்கேற்றால்போல லுங்கி கட்டுபவன் ரவுடி என்ற தோற்றத்தை நமது திரைப்பட மேதாவிகள் உருவாக்கி உள்ளனர்.  அதையும் தாண்டி, தற்போதைய ரவுடிகள் கால்சட்டை மீது லுங்கியை கட்டி, அதை லுங்கி டான்ஸ் ஆகவும் மாற்றி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.

லுங்கி கட்டுவதில் உள்ள சவுகரியம் இன்றைய இளைய தலைமுறையினர் விருப்பம் காட்ட வில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் தங்களது சிறுவயது முதலே லுங்கி உடுத்துவது பழக்கமாகி வருகிறார்கள்.  அதுபோல நீண்ட தூர வாகனங்களை இயக்கும் கனரக  வாக ன ஓட்டுநர்களும் லுங்கி கட்டுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.

ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில், புதிய வாகன திருத்த மசோதாவை காரணம் காட்டி, லுங்கி கட்டிய டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து அடாவடி செய்துள்ளர் போக்குவரத்து காவல்துறையினர்.

மத்தியஅரசு இந்த மாதம் (செப்டம்பர் 2019)  அமல்படுத்தி உள்ள புதிய போக்குவரத்து மசோதா காரணமாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், வாகனங்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாதாரண இரு சக்கர வாகனத்துக்கு அதிக அளவு அபராதம் விதித்ததால், போலீசார் முன்னிலையிலேயே வாகனத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்த கட்ட உயர்வு பெரும்பாலான இடத்தில் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் லுங்கியுடன் வாகனத்தை இயக்கியதாக ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பதிய சட்ட திருத்தத்தில், வாகனத்தை லுங்கி கட்டிக்கொண்டு இயக்கக்கூடாது என்ற ஷரத்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறும் நிலையில், லுங்கி கட்டிக்கொண்டு வாகனத்தை இயக்குவது  சட்டப்படி தவறு என உ.பி. மாநில போக்குவரத்து துறை அந்த லாரி ஓட்டுனரை மிரட்டி அபராதம் வசூலித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ   போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங், வாகன ஓட்டுநர் ஆடை ஒழுங்கு என்பது 1989ஆம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருக்கும் சட்டம். ஏற்கனவே இதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது, தற்போது அது ரு.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளார்.

வாகன சட்டத்தின்படி, கனரக வாகன ஓட்டுநர்கள் பேண்ட், சர்ட் அல்லது டி-சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும் என்றும் விளக்கி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய  கூடுதல் போக்குவரத்து ஆணையர் கங்காபால், வாகன  லாரி, டிரக் மற்றும் இதர வகை கனகர வாகன ஓட்டுநர்கள் லுங்கி மற்றும் உள்ளாடைகளுடன் வாகனத்தை ஓட்ட அனுமதி கிடையாது. இந்த விதி கிளினர்களுக்கும் பொருந்தும் என்று கூறியவர், ஓட்டுநர்கள் லுங்கியுடன் வாகனத்தை இயக்கியது தவறு என்றும் தெரிவித்து உள்ளார்.

அப்போ பெரும்பாலான இடங்களில் சைக்கிள் ரிக்சாவை இயக்கும் தொழிலாளர்கள் அனைவரும் லுங்கியுடன்தான் வண்டியை ஓட்டி வருகிறார்கள்.லுங்கிதான் அவர்கள் வண்டிகை ஓட்ட சவுகரியமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். புதிய வாகன சட்டப்படி, ரிக்சா ஓட்டுனர்களுக்கும்  அபராதம் விதிக்கப்படுமா என சமுக வலைதளங்களில் நெட்டிஷன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமீப காலமாக மணமகனின் உடையே லுங்கியாக  மாறி வருவதாக விளம்பரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வாகனம் ஓட்டும்போது லுங்கி கட்டினால் அபராதம் என அரசு சட்ட திருத்தம் செய்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.