Random image

மறைந்த பிரபல டைரக்டர், குணச்சித்திர நடிகரின் மனைவி உணவுக்கே அல்லாடும் பரிதாபம்! திரையுலகம் கவனிக்குமா?

சென்னை:

மிழ்சினிமாவில் தனக்கென தனிப்பாணியுடன் படங்களை இயக்கியும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தவருமான ராஜசேகர் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி அன்றாட உணவுக்கே அல்லாடும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

உறவுகள் இன்றி தனிமையில் வாடும், ராஜசேகர் மனைவி தாராவுக்கு தமிழக திரையுலகம் உதவி செய்யுமா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இயக்குனர் இமயம்  பாரதிராஜாவால்,  நிழல்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்  ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற இது ஒரு பொன்மாலைப்பொழுது என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி, ராஜசேகரை இந்த உலகக்கு அடையாளம் காட்டியது. அதன்பிறகு அவரது   நண்பர் ராபர்ட் உடன் இணைந்து ‘பாலைவனச் சோலை’ ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’ என  சில வெற்றிப்படங்களை இயக்கி ராபர்ட் – ராஜசேகர் என்ற இரட்டை இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டினர்.

பின்னர், படத்தை இயக்குவதை தவிர்த்து, குணச்சித்திர நடிகராக சில படங்களில் தனது திறமையை காட்டி வந்தவர், கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார். அத்துடன் சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.

ஆனால்,   உடல் நலக் குறைபாட்டால், கடந்த செப்டம்பர் மாதம் 8ந்தேதி திடீரென காலமானார். இதையடுத்து அவரது மனைவி தனிமரமானார். ராஜசேகருக்கு குழந்தை எதும் இல்லாத நிலையில், உறவினர்கள் பாதுகாப்பும் கிடைக்காமல், ராஜசேகர் மனைவி தாரா, கஷ்ட ஜீவனத்தை ஓட்டி வருவதாக கூறப்படுகிறது.

சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்தும், தனக்கெடன சொத்துபத்துக்களே சேமிக்க தவறிய ராஜசேகர், தனது இறுதிக்காலத்தில்தான், தனக்கென ஒரு வீட்டை லோன் போட்டு வாங்கியதாக கூறப்படுகிறது.  வாங்கிய வீட்டின் பத்திரப்பதிவு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கும் முன்பே, சொந்த  சந்தோசமாக தனது இறுதி காலத்தை கழிக்கக்கூடாத முடியாத நிலையில், காலன் அவரை அழைத்துக்கொண்டுவிட்டான்.

இந்த நிலையில், ராஜசேகர் மனைவியான தாராவுக்கு, அவரது குடும்பத்தினரோ, ராஜசேகர் குடும்பத்தினரோ உதவ முன்வராத நிலையில், சின்னத்திரை, பெரியத்திரை சங்கங்களும் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜசேகர் வீடு வாங்க வாங்கிய லோசனை கட்டச்சொல்லி ஒருபுறம் வங்கி மூலம் நெருக்கடி கொடுக்க என்ன செய்வதென்ற தெரியாமல் விழிபிதுங்கி உள்ளார் தாரா ராஜசேகர்.

இதுகுறித்து கூறியுள்ள தாரா, வெளி உலகம்  என்ன வென்று கூட அறியாமல் என்னுடன் வாழ்ந்து வந்த தனது கணவரின் மறைவுக்குப் பின், இந்த உலகவே வெறுமையாக தெரிகிறது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தனது கணவர் வாங்கிய புதிய வீடு மட்டும் அவரது சாட்சியாக நிற்கிறது. ஆனால், அந்த வீட்டிலும் நிம்மதி இல்லை. இந்த வீட்டுக்கான பாதி லோனை கட்டி முடிச்சுட்டாரு. இப்ப அவரு இல்லாத நிலையில், மீதி லோனையும் கட்டுங்க என்று வங்கியில் இருந்து தொல்லைப்படுத்துவதாக கூறி, தன்னை மீறி வழியும் கண்ணீரை துடைத்துக்கொள்ளும் காட்சி பார்ப்போரின் கல்நெஞ்சையும் கரைய வைக்கிறது.

அவரோது கடைசிகால கனவு பாதியிலேயே கலைந்துபோகுமோ என்று அச்சப்படுவதாக கூறும் தாரா, தனது தற்போதைய வாழ்க்கையே….. கஷ்ட ஜீவனம் தான். சாப்பாட்டுக்கே சிரமமாக உள்ளது… அதனால்  வேலைக்குப் போக முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்….

சில தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை கேட்டிருப்பதாக கூறியவர், அவர்கள் ஆதரவு தரவில்லை என்றால்…. வீட்டு வேலைக்குத்தான் போகணும்….  வேற வழியில்லை என்று முந்தானையுல் முகத்தை பொத்திக்கொண்டு அவர் அழும் காட்சி…. மனதை உலுக்குகிறது…

பிரபலமான ஒரு டைரக்டர், நடிகர், தனக்கென சேமிக்க தெரியாதவரின் குடும்பம் இன்று சாப்பாட்டுக்கே கூட வழியில்லாமல் கஷ்டபடும் நிகழ்வு….சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது…

ராஜசேகரை வைத்து முன்னினணியில் வந்த எத்தனையோ நடிகர்கள் இன்று திரையுலகில் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நிலையில், அவரது மனைவி தனது கடைசி காலத்தை நிம்மதியுடன் கழிக்க உதவி செய்ய யாரும் முன்வரவில்லை என்பது…. வருத்தத்திற்குரிய விஷயம்…. திரையுலக சங்கங்கள் கவனிக்குமா?