ராஜ்நாத்சிங்கின் இன்னொரு முகம் – தாயுள்ளம்…

 

மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர், ராஜ்நாத்சிங். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பதவியை வகித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சராகவும் இருந்துள்ளார்.

அவர் 2002 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது தலித் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவன் பிரிஜேந்திரா 8 ஆம் வகுப்பு தேர்வில் முதன் மாணவனாக தேர்ச்சி பெற்று இருந்தார்.

தந்தையை இழந்த அவரது ஏழ்மை நிலை குறித்து அப்போது முதல்வராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தெரிய வந்தது. அந்த மாணவனின் படிப்பு செலவை ராஜ்நாத் ஏற்றுக்கொண்டார்.

20 ஆண்டுகளாக பிரிஜேந்திராவை தனது மகன் போல் கவனித்து வருகிறார்.

பிரிஜேந்திரா – இப்போது டாக்டர்.

அண்மையில் சொந்த ஊரான காசிப்பூரில் உள்ள கிராமத்தில் பிரிஜேந்திராவுக்கு கல்யாணம்.

ராஜ்நாத்சிங், தனது “வளர்ப்பு மகன்” பிரிஜேந்திராவின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

– பா. பாரதி