அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: செலவினங்களுக்கான அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 21ந்தேதி இந்த புதிய வகுப்புகள் தொடங்கப்படஉள்ளது.

இந்த நிலையில்,  அங்கன்வாடிகளில் செயல்படவுள்ள மழலையர் வகுப்புகளுக்கான செலவினங்கள் குறித்து சமூக நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அங்கன் வாடி மையங்களில் சிறார் வகுப்புகள் தொடங்க 7,73,32,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மொத்தமாக வழங்கப்பட்ட நிதியை சத்துணவு, சீருடைகள், எழுதுபொருட்கள் என பல்வேறு செலவினங்களுக்கு பிரித்து வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க 66,37,000 ரூபாயும், படிப்புச் சான்றிதழ் வழங்க 52,000 எழுது பொருட்கள் வழங்க 66,37,000 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.