டெல்லி:  உங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை உங்கள் மாநில தேர்தல் அட்டவனையை பாருங்கள் என  ராகுல்காந்தி  காட்டமா டிவிட் போட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசு  அன்று பீகார் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட அந்த அறிக்கையில், மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றால், மாநில மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்சி ஆய்வுப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜனவரியில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக சுகாதாரத்துறையினர் உள்பட முன்களப் பணியாளர்கள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையில், பீகார் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி, மோடி அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  இந்தியாவின் கோவிட் அணுகல் மூலோபாயத்தை மத்தியஅரசு  அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளை பதுக்கும் வகையில், தவறான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.  மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்  அதைப் எப்போது பெறுவீர்கள் என்பதை அறிய உங்களது மாநிலத்தில் தேர்தல்  அட்டவணையைப் பார்க்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.